search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி அரமசு"

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சாதகமாக வெளியானதையடுத்து, ஆம் ஆத்மி அரசின் திட்டங்களை விரைவுபடுத்தும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். #Kejriwal #AAPgovt
    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 

    மாநில அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 8 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசின் திட்டங்களை விரைவுபடுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக கெஜ்ரிவால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குதல், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #Kejriwal #AAPgovt
    ×